தேடற்பதிவுகளின் பாயிரம்..

அர்ப்பணிக்கிற கணத்தில் மனிதன் ஞானியாகவோ கடவுளாகவோ மாறிவிடுகிறான். நான் மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.

ம்.. இவை ஊடிழைகள்தாம். வாழ்வின் எழுதப்படாத பக்கங்களை மனிதன் புரிந்து கொள்ள முயன்றதில் அவனிடம் கிடைத்தது எல்லாம் எழுதி கசக்கி எறியப்பட்ட சில காகிதத் தாள்களும் மை புட்டிகளும். தொலைந்து போன மாய வார்த்தைக்காக இப்படியொரு தேடல். வாழ்வின் மாய இழைகளின் ஊடாய், யுகசந்திகளால் தொலைந்து போனது ஒரு வார்த்தை. வார்த்தையைத் தேடுகையில் தன் கதையையும் தன் கேளிர் கதையையும் இணைத்துப் புனைகையில் வார்த்தை நூல்களால் கோர்க்கப் படுகின்றன. ஒவ்வோர் புத்தகமும் இன்னணமாய ஒரு சுயபுனைதலில் உருவாவதே. எழுதியவரின் ஓர்மையின்றி கோர்க்கப்பட்ட இழைகளினூடே தானும் ஓர் இழையாய் ஒளிந்திருக்கிறது இந்த பிரபஞ்ச உயிர்ப்பிற்கான அவ்வார்த்தை. தன் இருப்பிற்கான ஒரு ஒளியை அது உணர்த்தினாலும் அவ்வார்த்தையைக் கண்டுகொள்வதிலேயே ஆரம்பித்தது இப்புத்தக வாசிப்பிற்க்கான பழக்கம்.. இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த தேடலும். வாசிப்பின் போதை தெளிவதில் எனக்கு அவ்வளவாய் விருப்பமுமில்லை.

Comments

Popular Posts